
8 க்குள் ஒரு யோகா !!! “எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது “நோய்”. நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும். சித்தர் வழி என்பது அனைத்துக்கும்தெளிவான விடைகளை தருகிறது. சித்தர்கள் : “எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!”என்கிறார்கள். நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம்.எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள். இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்துள்ளனர்.காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்க...